10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நேரில் சந்திக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே தனது விஜய் மக்கள் மன்றத்தினரை ஊரக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க அனுமதி அளித்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது நடிகர் விஜய் அரசியலில் நுழைவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நேரில் சந்திக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று மதிப்பெண் பெறும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை நேரில் சந்தித்து பரிசளித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற சுமார் 1500 மாணவ மாணவிகளை சந்தித்து பேச உள்ளதாகவும் அவர்களுக்கு நிதி உதவியும் கொடுக்கப் போகிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது.
Discussion about this post