வாஸ்கோடகாமா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் நகுல். மேலும் பிண்ணனி பாடகரான இவர் அந்த ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
அதன் பின்பு கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ந ‘காதலில் விழுந்தேன்’ படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது.
இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தில் நடிகர் நகுல் பிசியாக நடித்துவருகிறார்.
அதனைதொடர்ந்து அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து படப்பிடிப்பு பணிகளும் நிறவடைந்து நீண்ட நாட்கள் ஆகியும் ரிலீஸ் தேதி குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்த ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது குறித்த அடிகார்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”