நீங்கள் மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைகாக…!!
மயிலாடுதுறை மாவட்டம் விநாயகர் கோவில் மறுசீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நான்காம் கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை புனித நீரை ஊற்றி வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கோடியூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஜோலார்பேட்டை அருகே எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணகுமார், இருவரும் சாலையில் வளைய முற்பட்ட போது விபத்துக்குள்ளானது. இதில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கமலக்கண்ணி அம்மன் மற்றும் மகாலஷ்மி தாயார் ஆலயத்தின் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக 4 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்..
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் 1000 ம்மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் சுந்தர வடிவேல் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை அடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கெளராப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நரேந்திரன். இவருக்கு சொந்தமாக 300 க்கும் மேற்பட்ட தேக்கு மரங்களும், மா மரங்களும் உள்ளது. இந்நிலையில் மூன்று தேக்கு மரங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி லட்சுமி. இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பொன்னேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் பலத்த காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லட்சுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..