ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “யாரடி நீ மோகினி” சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நக்ஷத்ரா. இந்த சீரியல் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நக்ஷத்ரா அடுத்ததாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “வள்ளி திருமணம்” சீரியலில் நடித்தார்.
இதனிடையே நக்ஷத்ரா கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி தனது காதலரான விஷ்வா என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஷ்வா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார். நக்ஷத்ராவின் தாத்தாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திடீரென விஷ்வாவுடன் சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நக்ஷத்ரா கர்ப்பமாக இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்ரா ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி டான்ஸ் ஷோ ஒன்றில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இவரின் குடும்பத்தை சேர்த்தவர்கள்… நக்ஷத்ராவுக்கு 5 மாத சீர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. தற்போது இது குறித்த வீடியோக்களை நக்ஷத்ரா, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Discussion about this post