நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரியை , சக வகுப்பு மாணவர்களே அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதிய வன்மத்தால் நடத்த இத்தகைய கொடூர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்:
நாங்குநேரி சம்பவம்
நாட்டின் இதயத்தில்
விழுந்த வெட்டு
சாதியைக்கூட மன்னிக்கலாம்
அதற்கு
இழிவு பெருமை கற்பித்தவனை
மன்னிக்க முடியாது
சமூக நலம் பேணும்
சமூகத் தலைவர்களே!
முன்னவர் பட்ட பாடுகளைப்
பின்னவர்க்குச்
சொல்லிக் கொடுங்கள்
அல்லது
மதம் மாறுவதுபோல்
சாதி மாறும் உரிமையைச்
சட்டமாக்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
நாங்குநேரி சம்பவம்
நாட்டின் இதயத்தில்
விழுந்த வெட்டுசாதியைக்கூட மன்னிக்கலாம்
அதற்கு
இழிவு பெருமை கற்பித்தவனை
மன்னிக்க முடியாதுசமூக நலம் பேணும்
சமூகத் தலைவர்களே!முன்னவர் பட்ட பாடுகளைப்
பின்னவர்க்குச்
சொல்லிக் கொடுங்கள்
அல்லது
மதம் மாறுவதுபோல்
சாதி மாறும் உரிமையைச்…— வைரமுத்து (@Vairamuthu) August 14, 2023
Discussion about this post