80 முதல் 2k கிட்ஸ் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட வைரம்.. வைரமுத்து 71..!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் வைரமுத்து.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆன வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.
1980ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலின் மூலம் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால்..வேள்விகளை..நான் செய்தேன்..
இது ஒரு பொன்மாலை பொழுது..
முதன் பாடலிலே ரசிகர்களிடம் நல்ல வரவேப்பை பெற்றார். 80,90,2கே கிட்ஸ் வரை இவரது பாடலை விரும்பாதவர்கள் யாரும் இல்லை பாடல் ஒலிக்காத இடமும் இல்லை.
விருதுகளின் நாயகன்:
இவர் 1990ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் 2014 ல் பத்ம பூசன் விருதும் , சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்ற பெருமையின் நாயகன்.
விருது பெற்ற பாடல்கள்:
முதல் மாரியாதையில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் விருதை பெற்றது அதில் ஒன்று.
தனது காதலனுக்காக நிலாவ கையில பிடிச்சி வச்சதாக காதலி சொல்ல எங்க நான் பாக்குறேனு காதலன் சொல்வதாக அமைந்தபாடல்
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்…
திருமணமான பெண் இவ்வளவு நாள் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு தனது புகுந்த வீட்டிற்கு செல்லும் போது அவள் மனதில் உள்ள வலிகளை சொல்வதாக கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற..
போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…
பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…
தனது தாய் மகளின் மீது வைத்த அளவுகடந்த பாசத்தை குறிக்கும் விதமாக கண்ணத்தில் முத்தமிட்டாள் திரைப்படத்தின் பாடல்..
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே… வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…ஆஹா… ஆஆ… ஆஆ… ஆஆ…
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
வானம் முடியுமிடம் நீதானே…
காற்றைப் போல நீ வந்தாயே…
சுவாசமாக நீ நின்றாயே…
மார்பில் ஊறும் உயிரே…
இப்படி தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு நமது உணர்வுகளோடு கலந்த பாடல்களை தமிழ் சினிமாவிற்கு பரிசாக கொடுத்த நமது வைரமுத்து அவர்கள் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்…
-பவானி கார்த்திக்