வேட்டையன் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்..!
ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா புரெடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
மேலும் இந்த படத்தில் ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றம் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.
இந்தநிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து, டப்பிங் பணிகளும் பின்னணி இசை கோர்ப்பு பணிகளும் திவீரமாக நடைபெற்று வருகின்றது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு வேட்டையன் படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்தநிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவலும் வெளியாகி ரஜினி ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இசைவெளியீட்டு விழா:
அதன்படி வேட்டையன் இசைவெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-பவானி கார்த்திக்