ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி இரண்டு வாகனங்கள் மீது மோதல் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதியது இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர் அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஓசூர் தர்கா பகுதியில் பெங்களூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்து டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதி விபத்துக்களானது ,இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கலையரசன், வீரபூசய்யா இருவர் படுகாயம் அடைந்தனர் மேலும் டிப்பர் லாரி ஓட்டி வந்த டிரைவர் தசரதன் காயமடைந்துள்ளார் மூவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
விபத்து குறித்து சம்பவயிடத்திற்கு சென்ற புலனாய்வு போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தினர். தர்கா பஸ் நிறுத்த பகுதியில் பயணிகள் ஏராளமானோர் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் சேதம் இன்றி தப்பினர்
அதி வேகமாக வந்த கட்டுபாட்டை இழந்து தாருமாறாக ஓடிய டிப்பர் லாரி வீடியோ பதிவு முன்னாள் சென்று கொண்டிருந்த மினி பேருந்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.