20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை…!! வேதனையில் மக்கள்…!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதியில் பாசன வசதிற்காக கட்டப்பட்ட குப்பநத்தம் அணைக்காக, துரிஞ்சிகுப்பம் கல்லாத்தூர் கிளையூர் மோட்டூர், மண்மேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்கள் மற்றும் தங்கள் குடியிருப்பு பகுதிகளை அரசுக்கு வழங்கினர். இதனால் அவர்கள் குடி பெயர்ந்து மாற்று இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இவ்வாறு குப்பநத்தம் அணையை ஒட்டியுள்ள மண்மேடு பகுதிக்கு குடிபெயர்ந்த மக்கள் மழைக்காலங்களில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தை, உயிரை பயணம் வைத்து கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. பள்ளிப் பிள்ளைகள் மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள், விவசாய நிலத்தில் இருந்து விளை பொருட்களை செங்கம் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய விவசாயிகள் மழைக்காலங்களில் கடும் அவதிக்குள்ளாகின்றனர்..
இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை ஆட்சிகள் மாறினாலும், காட்டாற்று வெள்ளத்தைக் கடந்து செல்லும் காட்சிகள் மாறவில்லை என மன வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாதையை கடந்து வெள்ளத்தை எதிர்கொண்டு விட்டோம் ஆனால் இனி அப்படி நடக்க போவதில்லை எனவே எங்களின் கோரிக்கையை ஏற்று அரசு விரைந்து செயல்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..