ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாட்டை காப்பாற்றுவதற்காக ஆயுதம் ஏந்திய உக்ரைன் நடிகர் வீரமரணம் அடைந்துள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இன்றுடன் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் இராணுவத்தில் 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் இணையலாம் என உக்ரைன் அதிபர் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, பலர் ராணுவத்தில் இணைந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தாய்நாட்டை பாதுகாக்க ரஷ்யாவிற்கு எதிரான போரில் களமிறங்கிய உக்ரைனிய நடிகர் பாஷா லீ ரஷ்ய தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். 30 வயதில் உயிர்த்தியாகம் செய்த இவருக்கு சக நடிகர்களும் ரசிகர்களும் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.