ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து கடந்த இரு தினங்களில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் தப்பி ஓட்டம் ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியுடைய மாணவர்களை தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்றோடு பகுதியில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுவர்கள் ஒற்றை பெற்றவருடைய சிறுவர்கள் மற்றும் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சிறுவர்கள் உள்ளிட்ட பலதரப்பு சிறுவர்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கி பயின்று வருகின்றனர்
சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி செயல்பட்டு வருவதால் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்பிற்காக மாணவர்கள் அருகாமையில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று பயின்று வருகின்றனர் . இந்நிலையில் வழக்கம் போல் நேற்று மதியம் பள்ளிக்கு சென்றார் 11 ஆம் வகுப்பு மாணவன் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்திற்கு திரும்பவில்லை மாணவன் வராத காரணத்தினால் அரசினர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் பொறுப்பு கோமதி உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காத காரணத்தினால் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை காவல்துறையினர் சிறுவனை தேடும்படியில் ஈடுபட்டு வருகின்றனர் இதே போன்ற சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்று பள்ளிக்குச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் தப்பியோடியுள்ளான் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
கடந்த இரண்டு தினங்களில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளத