வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை வனச்சரகத்தை ஒட்டியுள்ள காப்பு காட்டு பகுதியில் மான், காட்டுப்பன்றி, மயில், முயல் உள்ளிட்ட வன விலங்குகளை அடிக்கடி அப்பகுதியில் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வேட்டையாடி அதன் இறைச்சியை அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து வருகின்றனர்.
இந்த சட்டவிரோதமான செயல் குறித்து திருவண்ணாமலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வேட்டை குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வீரணம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் பச்சையம்மாள் குறித்து ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சட்டவிரோதமாக காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை வனச்சரகர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர்.
பின் வனத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து, அந்த இருவரையும் விடுதலை செய்துள்ளனர்.