தவெக பூத் ஏஜெண்ட் கருத்தரங்க கூட்டம்..!! முக்கிய அறிவிப்பு வெளியீடு..!!
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மாவட்ட கூட்டம், ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தவெக சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தவெக சார்பில் ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27ம் தேதிகளில் கோவையில் நடைபெறும் பூத் ஏஜெண்ட் கருத்தரங்க கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம், தமிழக மக்களின் பேரன்பு மற்றும் பேராதரவை பெற்றுள்ளது. தலைவர் விஜய் கட்சியை தொடங்கிய நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துகொண்டே இருக்கிறது.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக, நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் (26.04.2025 & 27.04.2025) தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில், குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் உங்களுடன் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 மாவட்டங்களை சேர்ந்த கழக வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும் இந்தக் கருத்தரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாவில் பார்த்த Add..!! கொள்ளை போன 30 சவரன் தங்க நகைகள்..!! உஷார் மக்களே..!!