நடிகை நிக்கி கல்ராணிக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் ஜிவிபிரகாஷிற்கு ஜோடியாக டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இதனை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம், ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நிக்கி நடித்துள்ளார்.
இதையடுத்து, மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருக்கிறார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நிக்கிகல் ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த நிலையில், அவர்கள் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
முன்னதாக, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நிக்கி கல்ராணி ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கிடையில், 2020 ஆம் ஆண்டு ஆதி தந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நிக்கி கல்ராணி, பின்னர் ஜோடியாக ஹைதராபாத்தில் உலாவந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
இதனால் ஆதி-நிக்கி இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவிய நிலையில் தற்போது இந்த ஆண்டு இவர்கள் இருவரும் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.