வெயிலில் முகம் கருக்காமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!!
சூரிய கதிர்வீச்சுக்கள் நேரடியாக சருமத்தில் படுவதால், சருமம் பொலிவிழந்து விரைவில் கருத்து விடும். வெயிலிலும் முகம் கருக்காமல் இருக்க சில டிப்ஸ் பற்றி இங்கே பார்க்கலாம்.
* டிராகன் பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, முகத்தில் பயன் படுத்த வேண்டும். இதனால் முகப்பரு குறைந்து விடும். சன் டான் சரியாகி சருமத்தில் நீரேற்றைத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.
* டிராக்கன் பழம் மற்றும் தயிர் எடுத்துக்கொள்ளவும்.
* டிராகன் பழத்தை பாதியாக வெட்டி அதன் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட வேண்டும். பின் அதை ஒரு பவுலில் மாற்றி தயிர் சேர்க்க வேண்டும்.
* இரண்டையம் ஒன்றாக சேர்த்து அரைத்து பேஸ்ட் போல எடுத்துக்கொள்ள வேண்டும்.
* முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்யவேண்டும்.
* முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து முகம் கழுவி, மென்மையான துணியால் துடைக்க வேண்டும்.
* வாரத்திற்கு ஒருமுறை இதை செய்து வந்தால் கருக்காது, முகம் சுருக்கம் அடையாது, என்றும் இளமை தோற்றத்துடன் இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்