சிக்கிய கஞ்சா விற்பனையாளர்கள்..!! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!
தமிழகத்தில் போதை பொருள் ஒழிப்பை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் தினமும் காவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்..
அப்படியாக சென்னை முகலிவாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது., கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.., அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சேர்ந்த சஞ்சய் (22), சுபாஷ் (25) ஆகிய 2 பேரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
அப்போது பல தகவல்கள் வெளியானது.., அதாவது மும்பையில் இருந்து சென்னைக்கு இரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக வாங்கி வந்த 18,000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். போதை மாத்திரைகளை விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரிய வந்தது., மேலும் இதில் வேறு யாரவது சம்மந்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..