சிக்கிய அதிமுக நிர்வாகிகள்..!! எடப்பாடியின் முடிவு..?
சென்னையின் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து நீக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, புளியந்தோப்பு, நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ், 49. பிரபல ரவுடியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன், பட்டினம்பாக்கத்தில் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி கழகத்தின் கொள்கைக்கு, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கம், மற்றும் கெட்ட பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, C. ஜான்கென்னடி (ஆயிரம்விளக்கு வடக்கு பகுதிக் கழக மாவட்டப் பிரதிநிதி). B. சுதாகர் பிரசாத் ( 111 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர், ஆயிரம்விளக்கு வடக்கு பகுதி) ஆகியோர், இன்று கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட பிற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிம் செய்யப்படுகிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post