சென்னையில் முடிவுக்கு வந்தது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்.
போராட்டம் முடிவுக்கு வந்தததையடுத்து பேருந்து போக்குவரத்து வழக்கம்போல இயங்கத் தொடங்கியது. பேருந்து ஓட்டுநர் தனியார் மயம் என்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தால் பயணிகள் 1 மணி நேரமாக அவதி அடைந்தனர்.
சென்னையில் தொமுச தொழிற்சங்கம் சார்பில் அரசு பேருந்துகள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது/ பேருந்துகள் தனியார் மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுவதாக கூறப்பட்டது.
இதனையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், தொழிற்சங்கங்களிடம் பேசியுள்ளோம். பேருந்துகளை இயக்குவதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
பிரச்சனைகள் விரைவில் பேசி தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும், விரைவில் இயல்பு நிலைமை வரும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். ஜப்பானில் உள்ள முதல்வரின் அறிவுறுத்தல் படி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட்டதாகவும் கூறினார்.