பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீருடை அல்லது அடையாள அட்டை அணிந்திருந்தால் மட்டுமே அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட அடிக்கும் கோடை வெயிலால் மாணவர்கள் அவஸ்தைப்பட கூடாது என்பதற்காக ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலவச பாஸ் மூலம் பயணிக்கும் மாணவ, மாணவர்களை வழிநடத்துவது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி பள்ளி சீருடையில் வரும் மாணவ, மாணவிகளிடம் பஸ் பாஸ் கேட்க கூடாது என அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டணமில்லாத பேருந்து பயண அட்டையை வழங்க கால அவகாசம் தேவை என்பதால் அதனைக் கருத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டால் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post