1மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்..! அதிகரிக்கும் தெருநாய்கள் கொடூரம்.
சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க விரட்டுகின்றன.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சக்திவேல் – நந்தினி. சக்திவேல் தற்போது வெளிநாட்டில் செய்து வருகிறார்.
இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. குழந்தையின் தாய் நந்தினி, வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த தெரு நாய் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 1 மாத குழந்தையை கடித்துக் குதறி உள்ளது.
குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது, தெரு நாய் குழந்தையை கடித்தது தெரியவந்தது.
இதையடுத்து, படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நாய் கடித்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்