உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் சிவபழனி தலைமையில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை முடக்கப்பட்ட சரண்விடுப்பு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருப்பூர்:
திருப்பூரில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பூக்களின் விலை அதிகரித்து உள்ளதால் வியாபரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், தலைமை தபால் அஞ்சலகத்தில் இந்திய அஞ்சல் துறை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அஞ்சல் வார விழா கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டும் அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தில் கோட்டக் கண்காணிப்பாளர் ஜெயசீலன் அவர்கள் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் துறை பற்றிய வரலாறு அஞ்சல் தலை சேகரிப்பு, கடிதப் போக்குவரத்தில் வளர்ச்சி ஆகியவை தெரிவிக்கும் வகையில் அஞ்சல் அலுவலங்களில் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றன.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் 36 வார்டுகளின் சரியான முறையில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்வதில்லை என பொதுமக்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பிக்கு புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் நல்ல தம்பி திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளை அழைத்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணம் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து விரைந்து சரி செய்து பொது மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம்,பொய்கையில் உள்ள ரஞ்சன் மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்குமாவட்டம் சார்பில் பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் 57வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் மருத்துவ முகாமானது நடைபெற்றது. இந்த முகாமில் தனியார் மருத்துவமனையின் சார்பில் பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனைகள் ,நீரிழிவுநோய் , ரத்த அழுத்தம், கண் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்பட்டது. இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த யாதவ் பிரதாப் என்பவர் ஏரிகொடி பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் பாங்க் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றபோது பணத்தை எடுக்க முற்படும் போது ஏற்கனவே யாரோ ஒருவர் எடுக்கப்பட்ட பணம் ரூபாய் 500 அந்த ஏடிஎம்மில் இருந்ததால் அதனை காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் வியப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.