உலகமே புத்தாண்டை வரவேற்க மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் இந்த தருவாயில் 2022ம் ஆண்டு கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய முதல் 10 விஷயங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2022ம் ஆண்டு மக்களால் அதிகம் கூகிளில் தேடப்பட்ட விஷயங்களில் இந்தியர்கள் விளையாட்டின் மீது அதிகம் கவனம் செலுத்தியுள்ளனர். அதன்படி முதல் 10 இடங்களில் ஆறு இடங்களை ஸ்போர்ட்ஸ் இடப்பெற்றுள்ளது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பட்டியலின் படி முதலாவதாக இடம்பெற்றுள்ளது, இந்தியாவின் மிக பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் முதல் இடத்தை பிடித்துள்ளது.அதனை தொடர்ந்து இரண்டாவதாக கொரோனா தொற்றினை பற்றி அறிந்து கொள்ள உதவும் கோவின் இணையதளம் இரண்டவது இடத்திலும் அதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை மூன்றாவது இடத்தையையும் பிடித்துள்ளது.
மேலும், நான்காவது இடத்தில் ஆசியா கோப்பையும் முறையே ஐந்தாவது இடத்தில டி20 உலக கோப்பையும் உள்ளது. இதனை தொடர்ந்து, பாலிவுட் படமான பிரம்மாஸ்திரா திரைப்படம் ஆறாவது இடத்திலும் அதனையடுத்து ஏழாவது இடத்தில ஒன்றிய அரசின் திட்டங்களின் ஒன்றான இ-ஷ்ராம் அட்டைகளை அதிகமாக தேடியுள்ளனர். மேலும் அடுத்ததாக கோடை விடுமுறையில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை செய்த கே.ஜி.எப்.2 ஒன்பதாவது இடத்திலும் இந்திய கால்பந்து தொடரான இந்தியன் சூப்பர் லீக் பத்தாவது இடத்தியும் பிடித்துள்ளது. இதன்மூலம் இந்தியர்களுக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது எனபதை தெளிவாக காணமுடிகிறது.