மழையின் காரணமாக வரத்து பாதிக்கபட்டதால் தக்காளி விலை இன்று 10 ரூபாய் உயர்வு
கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று மொத்த விற்பனையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை,…புறநகர் பகுதிகளில் 90 முதல் 100 ரூபாய் வரை முதல் ரக தக்காளி விற்பனை செய்கின்றனர்.. கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த நான்கு நாட்களாக சில்லறை விற்பனை யில் 100 ரூபாய்க்கு கீழ் தக்காளி விற்பனை செய்யபட்டு வருகிறது…
இந்நிலையில் இன்று மழையால் வரத்து சற்று குறைந்து உள்ள நிலையில் 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. மேலும் இரண்டாம் ரக தக்காளி 50 ரூபாய்க்கும் மூன்றாம் ரக தக்காளி 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.