டோல் பிளாசாக்களில் நிற்க வேண்டாம் : வங்கிக்கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் – நிதின் கட்கரி
இனிமேல் வாகனங்கள் டோல் பிளாசக்களில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வாடிக்கைளரின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக பணம் பிடித்தம் செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது, செக் போஸ்ட்டுகளை கடக்கும் போது கட்டணம் செலுத்த வேண்டும். வாகனங்களுக்கு ஏற்ற வகையில் டோல் பிளாஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர், நேர விரயமாவதாக கூறி பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பாஸ்டேக் அறிமுகத்துக்கு முன் டோல்கேட்டில் ஒவ்வொரு வாகனமும் 714 விநாடிகள் நிற்க வேண்டியது இருந்தது. பாஸ்டேக் அறிமுகத்துக்கு பிறகு அதுவே 47 விநாடியாக மாறியது. ஆனால், பாஸ்டேக் ரீசார்ஜ் செய்வதில் தொடங்கி பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக இந்த திட்டத்திலும் புகார் எழுந்தது. இதையடுத்து, மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றொரு திட்டத்தை மே 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ‘ மே ஒன்றாம் தேதி முதல் டோல் பிளாசாக்களில் வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியமில்லை. atellite-based toll collection system முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின்படி, டோல் பிளாசாக்களை கடக்கும் வாகனங்களின் உரிமையாளர் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், டோல் பிளாசாக்களில் நெருக்கடி ஏற்படுவது தவிர்க்கப்படும். எரிபொருள் மிச்சமாகும். சாலை போக்குவரத்தை நவீனப்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு வாகனமும் செயற்கை கோள் வழியாக கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.