ஜெண்டில்மென் ஆக்ஷன் கிங் அர்ஜுன் பிறந்த தினம் இன்று..!!
நடிகர் அர்ஜூன்:
தென்னிந்திய சினிமாவில் புகழ்பெரும் நடிகர்களின் ஒருவர் நடிகர் அர்ஜூன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் கலக்கி வரும் இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததால், ரசிகர்கள் இவரை “ஆக்சன் கிங்” அர்ஜூன் என்று அழைக்கின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை துவங்கிய இவர் 1980களில் தமிழ், கன்னடம் என மாறி மாறி நடித்து வந்தார்.
1993-ல் இயக்குநர் ஷங்கர் அறிமுகமான ‘ஜெண்டில்மேன்’ படத்தின் நாயகனாக அர்ஜுன் நடித்திருந்தார். மிக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற இந்தப் படம் அர்ஜுனின் திரைவாழ்விற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதன்பின் பல திரைப்படங்களை கொடுத்த இவர் முதல்வன் திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சியை அடைந்தார்.
வில்லனாக ஆக்சன் கிங்:
மங்காத்தா திரைப்படத்தில் எதிர்மறை அம்சங்கள் நிரம்பிய நாயகனை எதிர்க்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் அர்ஜுன். அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றியும் அவருடைய கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின்பு கடல், இரும்புத்திரை, லியோ ஆகிய திரைப்படங்களில் வில்லானகவும் நடித்துள்ளார்.
150 திரைப்படம்:
தனது ஏதார்த்தமான நடிப்பாலும் இளமையான தோற்றத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நமது ஆக்சன் கிங் அர்ஜூன் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உலகமே இன்று 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நமது ஆக்சன் கிங் தனது 62வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மதிமுகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-பவானி கார்த்திக்