சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது நடுத்தர மக்களையும், இல்லத்தரசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,560 ரூபாய்க்கும், சவரன் 44,480 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்று (மார்ச் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,550 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 44,400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் குறைந்து 6,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 48,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளியின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் அதிகரித்து 76 ரூபாய்க்கும், ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் அதிகரித்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஃபெடரல் வங்கி பணவீக்கம் மற்றும் வங்கிகளின் நெருக்கடி நிலையை சரி செய்யும் விதமாக வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது. இதனால் கடந்த 7 வாரங்களாக சரிந்து வந்த டாலர் மதிப்பு மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. எனவே தங்கத்தின் மீதான முதலீடுகள் டாலர் மீது குவிய ஆரம்பித்துள்ளது, விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.