குண்டக்க மண்டக்க பேசும் ஹீரோவுக்கு டுடே..?
தமிழ் திரை உலகில் நடிகர்.., திரைப்பட இயக்குனர்.., தயாரிப்பார் என பன்முகத்தன்மை கொண்ட “ரா.பார்த்திபன்” பிறந்தநாள் இன்று . அவரின் திரைப்பயணத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க
சென்னை ராயபுரத்தில் பிறந்த பார்த்திபன் முழுக்க முழுக்க சென்னையை நங்கு கற்று தெரிந்தவர். பாக்யராஜ் இயக்குநராவதற்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நாட்களிலேயே, நடிகராக ஜொலிப்பதற்கு முயற்சி செய்தவர் பார்த்திபன். “கன்னிப்பருவத்திலே” பட இயக்குநர் பாலகுரு படம் இயக்குவதற்கு முன்பு அவரிடம் பார்த்திபனும், பாக்யராஜும் ஒன்றாகவே வாய்ப்பு கேட்டுள்ளனர்.
நடிப்பதற்காக பயங்கரமாக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த பார்த்திபன் நடிகர் பானுசந்தர், ஒரு தலை ராகம் சங்கர் போன்றவர்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்து டப்பிங் கலைஞராகவும் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டார் பார்த்திபன்.
பாக்யராஜிடம் உதவியாளராக சேர்ந்த பார்த்திபன்.., உதவியாளராக சேர்ந்த முதல் படத்திலேயே நடிகையர் திலகம் சிவாஜியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.., “தாவணிக் கனவுகள்” என்ற படத்தின் மூலம் நடிகர், இணை இயக்குநர் என இரண்டிலையும் சவாரி செய்தார் பார்த்திபன்.
தாவணிக் கனவுகள், சின்ன வீடு.., ஒரு கைதியின் டைரி படத்தின் இந்திப் பதிப்பான “ஆக்ரீ ரஸ்தா” போன்ற படங்களில் பாக்யராஜிடம் உதவியாளராக வேலை செய்தார் பார்த்திபன், “புதிய பாதை“ படம் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானார்.
இவர் இயக்கிய முதல் படமே தேசிய விருது பெற்றது. எப்போதும் புதுமையான கதைகளை திரையில் வழங்க விரும்பும் பார்த்திபன்.., பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள் போன்ற படங்களின் தோல்விக்குப் பிறகு உள்ளே வெளியே, புள்ளகுட்டிக்காரன் என படு கமர்ஷியல் படங்களைக் கொடுத்தார்.
மற்ற இயக்குனரின் இயக்கத்தில் பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடிகட்டு போன்ற படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகராக காட்டினார்.., வடிவேலுடன் இணைந்து நகைச்சுவையும் வெளிப்படுத்தினர் பார்த்திபன் .
வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு தேசிய விருதை பெற்றார் “ஹவுஸ்புல்” என்ற திரைப்படத்திற்கு .
இவர் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும்.., செல்வராகவன் இயக்கிய “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று கூறலாம் .
சில வருடங்கள் கழித்து 2014 ம் ஆண்டு இவர் இயக்கிய “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” என்ற திரைப்படம் 2014ம் ஆண்டு வெளியாகி அந்த வருடத்தில் பேசும்படியான படமாக அமைந்தது. தொடர்ந்து தன்னுடைய குருநாதரின் மகனான சாந்தனு பாக்யராஜை வைத்து “கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற படத்தையும் இயக்கினார்.
மீண்டும் 2019 ஆம் ஆண்டு இவர் மட்டுமே நடித்து வெளிவந்த “ஒத்த செருப்பு” என்ற வித்தியாசனமான படைப்பு ரசிகர்களாலும்.., திரை பிரபலங்களும் வெகுவாக பாராட்டினார். “புதிய பாதை, ஹவுஸ்புல்” படங்களைத் தொடர்ந்து “ஒத்த செருப்பும்” தேசிய விருதை வென்றது.
“ஒத்த செருப்பு” படம் கொடுத்த வெற்றியின் தைரியத்தில் “இரவின் நிழல்” படத்தினை சிங்கிள் டேக் படமாக உருவாக்கினார் பார்த்திபன். ஆனாலும் “ஒத்த செருப்பு” அளவிற்கு இரவின் நிழல் ரசிகர்களை கவர மறுத்தது.
மணிரத்தினம் இயக்கிய மாபெரும் வெற்றி படம் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சின்ன பழுவேட்டைரையராக சில காட்சிகளில் வந்தாலும் கூட தனது கம்பீரமான தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
தமிழ் சினிமாவில் எழுத்தாலும்.., தனது நடிப்பாலும்.., இயக்கத்திலும் தனது தனித்திறமையை வெளிக்காட்டும் பார்த்திபனின் பிறந்த நாள் இன்று இவரின் திரைப்பயணம் இன்னும் தொடர மதிமுகம் சார்பாக நம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..