தமிழகத்திலுள்ள பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தினை மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது வருகின்ற கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திடமிருந்து கருத்துகளை பெற்று பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளின் பாடத்திட்டனை மறு சீரமைப்பு செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்த பாடத்திட்ட மறுசீரமைப்பானது, மாணவர்களின் வேலை வாய்ப்பு திறனையும், தொழில் முனையும் திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இப்புதிய பாடத் திட்டமானது வருகின்ற 2023-24 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.