கழுத்து வலி தொல்லை சரி செய்ய – இதை செய்து பாருங்கள்.
தலைவலி, பல் வலி, கழுத்து வலி, கால் வலி என அவதிப்படாதவர்களே இல்லை. அதிலும் கழுத்து வலி பலரும் அனுபவிக்கும் ஒன்று. கழுத்தில் வலி ஏற்பட்டால், கழுத்தில் மட்டுமா வலி கொடுக்கிறது. தோள்பட்டை, முதுகுப்பகுதி என அனைத்து பகுதியிலும் வலியை ஏற்படுத்தும்.
அப்படி அவஸ்தை கொடுக்கும், கழுத்து வலியை சரி செய்ய சில டிப்ஸ்.., ட்ரை பண்ணுங்க.
கழுத்து வலி ஏற்படும் பொழுது, ஒரு காட்டன் துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து, வலி இருக்கும் இடத்தில் ஒத்தரம் கொடுக்கலாம்.
நல்லெண்ணெயை நன்கு சூடாக்கி அதில் நொச்சி இலையை வைக்கவும். பின் அந்த எண்ணெயை எடுத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின் வெண்ணீரில் குளித்தால், வலி உடனே நீங்கி விடும்.
காய்ச்சிய பாலில் கண்டந்திப்பிலி இலையை பொடி செய்து, பணங்கற்கண்டு கலந்து குடித்தால். வலி குணமாகும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் 2 தேக்கரண்டி ஆப்பிள் வினிகர், 2 தேக்கரண்டி வெண்ணீரை கலந்து எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு சிறு துணியில் நனைத்து வலி இருக்கும் இடத்தில் வைக்கவும். அப்படி செய்தால், அந்த வலியை வினிகர் எடுத்து விடும்.
கழுத்து வலி வருவதற்கான காரணம். நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது, தலை குனிந்த படியே வேலைகள் செய்தால், கழுத்து வலி ஏற்படும்.
மன அழுத்தம் ஏற்பட்டாலும் கூட, கழுத்து வலி வரும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.

















