“மகசூலை அதிகரிப்பதே இலக்கு” நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசு தலைமையிலான வேளான் பட்ஜெட் 3வது முறையாக இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேளாண் நிதிநிலை அறிக்கையை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார்.
– தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் – ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு.
– கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்.
– ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்கப்படும்”
– 127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,
2,504 ஊராட்சிகளில் ரூ.230 கோடியில் தானிய உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படும்.
– 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன.
Discussion about this post