7 ஆண்டிற்கு பின் நடைபெற்ற திருவள்ளூர் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா..!!
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து சாமி தரிசனம். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா 7ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த இருபதாம் தேதி விநாயகப் திருவீதி உலா கொடியேற்றம் தொடங்கியது,
நாளை அர்ஜுனன், திரௌபதி திருக்கல்யாணம். கருட வாகனத்தில் கிருஷ்ணமூர்த்தி திருவீதி உலா. திரௌபதி அம்மன் திருவீதி உலா, அர்ஜுனன் தவநிலை காட்சி திருவீதி உலா. தர்மராஜ சிறப்பு அலங்காரத் திருவீதி உலா, சிம்ம வாகனத்தில் மகாசக்தி ரூபம் அம்மன் திருவீதி உலா, வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு கரகம் எடுத்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர்.
இந்த ஆண்டு அதை விட அதிக பக்தர்கள் பங்கேற்கவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைக் காண கடம்பத்தூர் திருப்பாச்சூர் பேரம்பாக்கம் மப்பேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.