ஜி எஸ் டி வரியை தவிர்க்க தாத்தா காலத்து டிப்ஸ்..!!
பல இடங்களில் இன்று “ஜி எஸ் டி வரி” தான் உள்ளது. தங்கத்தாலும் ஜி எஸ் டி, தங்கம் அளவிற்கு உயர்ந்து விற்கும் தக்காளியில் ஜி எஸ் டி, காலையில் குடிக்கும் காபியில் இருந்து இரவு சாப்பிடும் டின்னர் வரை எதிலும் ஜி எஸ் டி வரி. உணவில் மட்டுமா..? சினிமா பார்க்க செல்லும் திரை அரங்கில் இருந்து.., உடுத்தும் உடையில் இருந்து.., ஷாப்பிங் சென்று பொழுது கழிக்கும் மால் வரை அனைத்திலும் “ஜி எஸ் டி வரி”.
இந்த ஜி எஸ் டி வரியை நம்மால் மாற்ற முடியுமா..? முடியாது ஆனால் அதில் நாம் சிக்காமல் இருக்க ஒரு சில டிப்ஸ் இருக்கு.., அது என்னவென்று நீங்களும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்..
ஜி எஸ் டி வரியை தவிர்க்க நம்ம தாத்தா காலத்து வழிமுறை தான் சரியானது.
1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும்.
2. பயணத்தின் போது புளி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால் வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லவும் ( டப்பால கட்டுங்க கவர்ல கட்டின ஜி எஸ் டி வரும் )
3. அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூட இல்லேன்னா மஞ்ச பை எடுத்திட்டு போய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை ஜாமான் வாங்குங்க .
4. வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதாவது ஸ்பெஷல் உணவு தயார் செய்து சாப்பிடுங்க.
5. திரைப்படத்தை multiplex அல்லாத திரையரங்குகளில் பாருங்க
6. விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாம பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம் .
7. காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க .
9. பழைய பழக்கங்கள் போல , நண்பர்கள் டூர் போனால் , பிற நண்பர்கள் எவராவது ஒரு வீட்டில் தங்குங்கள்
10. சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வேலையே செய்ய முயற்சி பண்ணலாம் .
இப்படி செய்தால் உடல் ஆரோக்கியமாகும்,
மிகப்பெரும் பணம் மிச்சமாகும்,
சொந்தம் பெருகும்,
மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும்,
நட்பு வட்டங்கள் உண்மையாகும்.
உண்மையான இந்தியா மீண்டும் பிறக்கும்..
மேலும் இதுபோன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திங்கள்..