2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் BookMyShow-வில் நாளை முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்தியாவின் முதன்மையான பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான BookMyShow-வை, உலகமே எதிர்பார்க்கும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான டிக்கெட் தளமாக நேற்று அறிவித்துள்ளது. இந்த தொடரின் பயிற்சி ஆட்டங்கள் தொடரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல், இறுதிப்போட்டி நடைபெறும். நவம்பர் 19 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த போட்டியில் 10 பயிற்சி போட்டிகள் உட்பட மொத்தம் 58 போட்டிகள் இடம்பெறும், நாடு முழுவதும் உள்ள 12 முக்கிய மைதானங்களில் நடத்தப்படவுள்ளது. ரசிகர்களுக்கு தடையற்ற மற்றும் விரிவான டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பிசிசிஐ இந்த முடிவினை எடுத்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-க்கான டிக்கெட்டுகளின் முன் விற்பனைக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் : மாஸ்டர்கார்டு முன் விற்பனை – வார்ம்-அப் கேம்களைத் தவிர்த்து இந்தியா அல்லாத அனைத்து அணிகளின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை 6 மணி முதல் : மாஸ்டர்கார்டு முன் விற்பனை – பயிற்சி விளையாட்டுகள் தவிர்த்து இந்திய அணியின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணி முதல் : மாஸ்டர்கார்டு முன் விற்பனை – அரை இறுதி மற்றும் இறுதி
மற்ற அனைத்து பயனர்களுக்கான டிக்கெட் விற்பனையும் கீழே உள்ள கட்டங்களின்படி பிரிக்கப்பட்டுள்ளது:
ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8 மணி முதல்: இந்தியா அல்லாத வார்ம்-அப் போட்டிகள் மற்றும் அனைத்து இந்தியா அல்லாத மற்ற அணிகளின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு 8 மணி முதல்: கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு 8 மணி முதல்: சென்னை, டெல்லி மற்றும் புனேவில் நடைபெறும் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு 8 மணி முதல்: தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பையில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 8 மணி முதல்: பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு 8 மணி முதல் : அகமதாபாத்தில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி இரவு 8 மணி முதல் : அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.