வெளிய போறவங்க குடையை மறக்காதீங்க.. இன்று இரவு வெளுத்து வாங்கும் மழை..!
சென்னையில் மாலை, இரவில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோரம், தெற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் ஜூலை 15ம் தேதிவரை 55 கி.மீ வரை காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-பவானி கார்த்திக்