தூத்துக்குடி கொலை வழக்கு..! குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட அதிரடி தீர்ப்பு..!
தூத்துக்குடி 2018ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி அன்று.., தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த சண்முகம் (65) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் ஆறுமுகம் என்பவர் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக கூறி இருந்தார். அந்த வழக்கை அப்போதைய முறப்பநாடு காவல் ஆய்வாளர் விஜயகுமார். புலன் விசாரணை நடத்தி 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II ல் விசாரணை செய்யப்பட்டது. அதன் பின் அந்த வழக்கு நேற்று மீண்டும் மறு விசாரணை செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி உதயவேலன்.
குற்றவாளியான ஆறுமுகம் என்பவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 302 பிரிவின் படி, ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் இந்திய தண்டனைச் சட்டம் 506(2) பிரிவின் படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5000 அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
மேலும் இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகியோரையும் நீதிபதி உதயவேலன் பாராட்டினார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..