இது என்னடா மார்க் ஆண்டனி படத்துக்கு வந்த சோதனை..!! சர்ச்சையில் சிக்கிய விஷால்..!!
தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக “எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி”.., போன்ற படங்களில் தோல்வி அடைந்ததால்.. தற்போது மார்க் ஆண்டனி படம் வெற்றி அடைந்திருக்கும் நிலையில்.., எதிர்பாராத விதமாக ஒரு ட்விஸ்ட் வந்துள்ளது.
மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் LGBT சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் இடம்பெற்று இருப்பதாகவும் இந்த காட்சிகள் அனைத்தும் திருநங்கைகளை கேளி செய்யும் விதமாக அமைந்து இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் திருநங்கைகளின் முன்னேற்றம் 10 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டு இருப்பதாக சில காட்சிகள் இடம் பெற்று இருப்பதால்.., மார்க் ஆண்டனி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட அந்த காட்சிகளை மட்டும் நீக்க வேண்டும் என இயக்குனர் மீது கோவையை சேர்ந்த ஜாஸ்மின் என்ற திருநங்கை கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.., இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது..
நடிகர் சங்க தலைவராக இருந்துகொண்டு விஷால் இப்படி செய்யலாமா.., எனவும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..