“ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவுக்கு முக்கிய முதல் காரணமே இது தான்”.. பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி..!
நட்சத்திர தம்பதியினர் விவாகரத்து செய்யும் செய்திகள் தொடர்ச்சியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தற்போது கோலிவுட்டில் பேசும் பொருளாக வலம் வந்து கொண்டிருப்பது ஜெயம் ரவி- ஆரத்தி தம்பதியினரின் விவாகரத்து செய்தி தான்.
இவர்களின் விவாகரத்துக்கான காரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு கருத்துகளை கூறி வந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே இதுவரை அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் இந்த விஷயம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டியில் கூறியதாவது:
அந்த பேட்டியில் “ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையேயான பிரச்னையில் ஜெயம் ரவி சம்பளம் கேட்டததுதான் முக்கிய காரணம் என்பதெல்லாம் இரண்டாவதுதான்.
அங்கிருந்து அவர் வெளியே வருவதற்குத்தான் 25 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டார் ரவி. உண்மையில் ஜெயம் ரவி மீது அவரது மனைவி ஆர்த்திக்கு எப்போதுமே சந்தேகம் வரும்.
மேலும் ஜெயம் ரவிக்கு ஆர்த்தி அடிக்கடி ஃபோன் செய்வார். அவர் எடுக்கவில்லை என்றால் ரவி ஷூட்டிங்கில் இருக்கும் இயக்குநர், கேமராமேன், துணை இயக்குநர் என ஒரு ஆளைக்கூட விட்டு வைப்பதில்லை.
எல்லோருக்கும் ஃபோன் போட்டு ரவியை பற்றி கேட்டுக்கொண்டிருப்பார். யாரும் எடுக்கவில்லை என்றால் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கிளம்பிவிடுவார்.
அதேபோல் அவுட்டோர் ஷூட்டிங் என்றாலும் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நிற்பார். ஜெயம் ரவியை வேவு பார்ப்பது முதல் வேளை. அது ஜெயம் ரவிக்கு ஒருகட்டத்தில் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இந்தப் பிரச்னையே ஆரம்பித்தது” என்றார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
-பவானி கார்த்திக்