மதுரை ரயில் தீ விபத்திற்கு இதுதான் காரணம்.. அமைச்சர் மூர்த்தி பேட்டி..!!
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீர் தீ விபத்து. இந்த கொடூர தீவிபத்தில் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். 6க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார், இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உத்திரபிரதேசம் மாநிலத்தை இருந்து சுற்றுலா பயணிகள் யாத்திரைக்காக தமிழகம் வந்துள்ளனர்.
இந்த விபத்து ஏற்பட்டவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கப்பட்டது, இந்த செய்தியை கேட்டவுடன் அவர் வருத்தம் தெரிவித்து என்ன பார்வையிட அனுப்பி வைத்தார். அவர்களின் உத்தரவின் பேரில், மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொள்ள சென்றேன். மொத்தம் 55 பயணிகள் ரயிலில் பயணித்துள்ளனர், காலை 4:30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. டீ குடிப்பதற்காக சிலிண்டரை பத்த வைத்துள்ளனர்.
மர்ம கொள்ளையர்களுக்கு பயந்து, ரயில் பெட்டியை பயணிகள் பூட்டி வைத்து விட, ரயில் பெட்டியை பூட்டிக்கொண்டு சமைத்ததால், திடீரென சிலிண்டர் வெடித்ததில் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Discussion about this post