ஆளுநர் பதவிக்கு இது அழகல்ல..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்நிலையில் ஆளுநரின் உரையுடன் தொடங்க இருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆளுநரின் இந்த செயல் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபாக இருக்கின்ற போது அதனை ஆளுநர் மீறுவது கண்டனத்திற்குறியது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று விமர்சித்துள்ளார்.
இப்படிப்பட்ட செயலைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களுடைய நலனில் அக்கறை இல்லாத ஆளுநராக செயல்பட்டு வருகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்க கூடாத சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம். துணைவேந்தர் இல்லாதது நிர்வாகத்தின் முதன்மையான பொறுப்பு. துணைவேந்தர் இல்லாததால் இப்படிப்பட்ட தவறுகள் நடக்க ஏராளமான வாய்ப்பு உள்ளது.
அவர் எடுத்த ஒவ்வொரு செயலும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக உள்ளது . பல பல விஷயங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்துக்கு எதிராக ஆளுநர் பேசி வருகிறார். ஆர் ஆர் எஸ் எஸ் இன் சித்தாந்தத்துக்கு வேலை பார்த்த வருகிறார் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பின் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என ஆளுநர் சபாநாயகரிடம் வலியுறுத்தியும் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதால் அவையில் இருந்து வெளியேறியதாக விளக்கம் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது பேசுபொருள் ஆகியுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபாக இருக்கின்ற போது அதனை ஆளுநர் மீறுவது கண்டனத்திற்குறியது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று விமர்சித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..