திருவள்ளுவர் சிலை திறப்பு வெள்ளி விழா…!! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கம்…!!
அரசுப் விரைவு பேருந்துகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கன்னியாகுமரியில் டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு வெள்ளி விழாவை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம், மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா இலச்சினை மற்றும் சிலை குறித்த விவரங்கள் அடங்கிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விரைவு பேருந்துகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..