அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதால் அந்த படம் சென்சார் போர்டிரிக்கு அனுப்பப்பட்டது அதனை தொடர்ந்து சென்சார் போர்ட் துணிவு படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது.
நடிகர் ஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் அந்த இரண்டு படங்களின் ப்ரோமோஷன் பணிகளும் உற்சகமாக நடந்து வரும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. துணிவு படத்தின் ட்ரைலரில் நடிகை அஜித்தின் கதாபாத்திரம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ள நிலையில் துணிவு ட்ரைலர்க்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் துணிவு படத்தின் படக்குழு சென்சாருக்காக தமிழ்நாடு சென்சார் போர்டில் துணிவு படத்தை சமர்ப்பித்தனர், அந்தப்படத்தை பார்த்த படக்குழு 13 இடங்களின் வசனங்கள் மற்றும் வார்த்தைகளை ம்யூட் செய்ய பரிந்துரைத்துள்ளது. மேலும் அந்த படத்திற்கு யுஏ சான்றிதழும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தாலும் குடும்பங்கள் பார்க்க கூடிய படமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது. இருப்பினும் இயக்குனர் வினோத் கூறுகையில்,இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.