35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகள் கடித்த இளைஞர்..! குறிப்பாக இந்த நாளில்..!
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விகாஸ் தூபே (வயது 24). இவரை கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகள் கடித்துள்ளது.
இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, முதல் முறையாக கடந்த ஜூன் -2 திகதி பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார்.
பின்னர், ஜூன் 2 முதல் ஜூலை 7 -ம் திகதி வரை 6 முறை பாம்பு கடித்துள்ளது. இவர், வீட்டில் இருப்பதால் தான் பாம்பு கடிக்கிறது என்று உறவினர் வீட்டிற்கு விகாஸை அவரது பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால், உறவினர் வீட்டில் வைத்தும் 5-வது முறையாக கடித்துள்ளது. அதன்பிறகு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று 6 -வது முறையாக கடித்துள்ளது.
இதுகுறித்து விகாஸ் தூபே கூறுகையில், “என்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. என்னை கடிக்க போவதை முன்கூட்டியே என்னால் உணர முடிகிறது” என்றார்.
– பவானி கார்த்திக்