பெண் அளித்த புகார்..! பாஜக செயலாளர் கைது..! பரபரப்பான வண்ணாரப்பேட்டை..!
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நவமணி. இவர் பாஜக கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார். பாஜகவை மாவட்ட செயலாளராக இருக்கும் செந்தில் என்பவருடன் நவமணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது நவமணி தனது குடும்ப சூழலை அவரிடம் கூறியுள்ளார். செந்திழும் அவருக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் இரயில் நிலையத்தில் கடை வைக்க அனுமதி பெற்று தருவதாக கூறி பணம் கேட்டுள்ளார். அதனை நம்பி நவமணியும் கடந்த 2022 ம் ஆண்டு இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்று கொண்ட செந்தில், நவமணிக்கு கடை வைக்க அனுமதி பெற்று கொடுக்கவில்லை.
அதைபற்றி நவமணி கேட்டாலும் அவர் மழுப்பி வந்துள்ளார். அதனால் மனமுடைந்த நவமணி இரண்டரை லட்சம் ரூபாயை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் செந்தில் பணத்தை கொடுக்காமல் அவரை திட்டியும், மிரட்டியும் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த நவமணி நேற்றைய முன் தினம் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதையடுத்து நவமணி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அவர் தற்கொலைக்கு முயற்சிக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் நவமணி தன்னுடைய தற்கொலைக்கு காரணம் செந்தில் தான் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த தண்டையார்பேட்டை போலீசார் செந்திலை கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை சஞ்சீவி ராயன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் இருந்த செந்திலை போலீசார் கைது செய்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற நவமணி தற்போது சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சென்னை பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..