வேலைக்கு சென்ற இடத்தில் கைவரிசை காட்டிய பெண்… வாட்ஸ்அப் மூலம் சிக்கியது எப்படி…!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து தம்பதியினர் ஸ்ருதிகா-பிரிஜேஷ்.
இந்தநிலையில் தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் வீட்டில் இருந்த 65கிராம் தங்க நகைகள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதற்காக அவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த ரேணுகா உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் வழக்கில் எந்த ஒரு தடயமும் தெரியாததால் போலீசார் திணறி இருந்தனர்.
தற்போது நான்கு மாதங்களுக்கு பிறகு வாட்ஸப் டிபி மூலம் அம்பலமானது. அதவாது ஸ்ருதிகா திடீரென வேலை பார்த்த ரேணுகாவின் வாட்ஸ்அப் டிபியை பார்த்த போது ரேணுகாவின் கழுத்தில் திருட்டு போன நெக்லஸ் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, போலீசார் ரேணுகாவை பிடித்து திவிர விசாரணை நடத்தியதில் நகையை திருட்டியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடன் திருட்டபட்ட நகைகளை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்