விவாகரத்து கோரிய கணவன் சேர்ந்து வாழ அழைத்து தர்ணாவில் ஈடுப்பட்ட மனைவி..!
சேலம் மாவட்டம் ஆத்துாரைச் சேர்ந்த தம்பதியினர் ரத்தினம்- வினோதினி 31. கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமான இவர்கள் தனது எட்டு வயது மகளுடன் சென்னையில் வசித்து வந்தனர்,
இந்தநிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனகசப்பு ஏற்பட்டு ரத்தினம் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.
இதன்காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்துகோரி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நீதிமன்றம் இருவரையும் சேர்ந்து வாழ உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவை கடைபிடிக்க மறுத்து தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும் கூறி தனது மகளுடன் வினோதினி கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பேசினர். பின் இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்று நாட்களுக்குள் ரத்தினத்தை அழைத்து வர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும் போலீசாரிடம் பேசிய வினோதினி 2019ல் ஏற்பட்ட சிறிய பிரச்னையால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். தற்போது 5 ஆண்டுகள் ஆகியும் இன் கணவரை பார்க்க அவரது பெற்றோர் விடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சேர்ந்து வாழ வலியுறுத்தியும் கணவர் குடும்பத்தினர் மதிக்கவில்லை.
தொடர்ந்து ஜீவனாம்சம் வழங்க வலியுறுத்தியும் அதற்கும் எந்த பதிலும் இல்லை. மேலும் ஒருமுறை கூட கோர்ட்டில் கணவர் ஆஜராகவில்லை. அவரது பெற்றோர் மட்டுமே ஆஜராயினர். இதனால் தனது கணவர் இருக்கிறாரா இல்லையா என சந்தேகமாக இருக்கிறது. எனவே அவரை கண்டுபிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-பவனி கார்த்திக்