வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தீவிரம்..!! பெயர் மாற்றம், நீக்கம், ஏதுவா இருந்தாலும் இந்த தேதி வரை மட்டுமே பண்ண முடியும்..!!
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் திமுகவினர் தீவிரமாக செயல் பட வேண்டும் என தலைமை கழகம் வேண்டுகோள் வைத்துள்ளது. திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிகையில் 1-1-2024 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் இருக்க வேண்டும்..
தமிழகத்திலுள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்யும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது
எனவே வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வருகிற 27ம் தேதி வெளியிட உள்ளது. வருகிற 27ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் மற்றும் பெயர்களை நீக்கவும், பெயர்களை திருத்தம் செய்யவும் கால அவகாசம் கொடுத்துள்ளது.
இதை தவிர, நவம்பர் 4ம் தேதி, 5ம் தேதி, நவம்பர் 18ம் தேதி, நவம்பர் 19ம் தேதி ஆகிய 4 நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1-1-2024 அன்று 18 வயது நிரம்பி இருக்கும் புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, கொடுக்கலாம்..
இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும் புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்..
இருக்கின்ற பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர் இதனால் அந்த தீவிரமாக நடைபெற்று வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..