இந்த நவீன காலத்திலும் ஒரு கழிப்பறை கூட இல்லாமல் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கிராமங்களில் பணிபுரிந்து, இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு, அனைத்து கிராம நிர்வாக அலுவலங்களிலும் கழிப்பறை வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை…
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: டிஜிட்டல் கிராப்ஸ் சர்வே பணியில் ஏற்படும் சில தவறுகள் திருத்தப்பட்டு, குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னரே அதற்கான பணியை மேற்கொள்வோம் எனவும், இந்த நவீன காலத்தில் ஒரு கழிப்பறை கூட இல்லாமல் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கிராமங்களில் பணிபுரிந்து, இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு, அனைத்து கிராம நிர்வாக அலுவலங்களிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில், பணிச்சுமையை குறைக்கும் வகையிலும், மன உளைச்சல் ஏற்படாமல் பாதுகாக்கவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் வகையில் அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரஞ்சித் குமார். மாவட்ட துணைத் தலைவர் ராஜா. மாவட்ட தலைமை நிலைய செயலாளர் வினோத்.மாவட்ட இனைச்செயலாளர் ஆதி நாகராஜன்.மற்றும், மாவட்ட. வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.