“தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை-தென்னரசு”
மற்ற மாநிலங்களை போல, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நிதிப்பகிர்வு தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு புள்ளி விவரங்களுடன் விளக்கம் அளித்தார்.
ஒன்றிய அரசு இதுவரை தமிழகத்திற்கு 4.75 லட்சம் கோடி மட்டுமே கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் ஒன்றிய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை என தெரிவித்தார்.
நிதி நெருக்கடிக்கு இடையே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்த அவர், கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு ஒனிய அரசு கொடுக்கும் நிதியை விட மாநில அரசு அதிக நிதி அளிப்பதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
