இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து.. சம்பவ இடத்தில் நிகழ்ந்த பரிதாபம்..!
தஞ்சாவூர் மாவட்டம், விக்ரமம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி ராதிகா (30) என்ற மனைவியும் மோனிஷ்(9) என்ற மகனும் இருந்தன.
இவர்கள் தஞ்சாவூரில் வசித்து வந்த நிலையில் நேற்று ஸ்கூட்டரில் ராதிகா தன் மகன் மோனிஷை அழைத்துக்கொண்டு, பரவாக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கீழக்குறிச்சி அருகே சென்ற போது, மதுக்கூரில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை ராதிகா முந்த முயன்றபோது, சாலையின் எதிர்புறம், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவனின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இரு வாகனங்களும் மோதியதில், ராதிகா, மோனிஷ், விக்னேஷ் ஆகிய மூண்ரு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுக்கூர் போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சில நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்