பிரியாணில பீஸ்க்கு பதிலா இருந்த ட்விஸ்ட்..? ஷாக்கான பிரியாணி பிரியர்..!!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வாடிக்கையாளர் வாங்கிய சிக்கன் பிரியாணியில் வெட்டுக்கிளி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் கேரளா மாநிலத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் வெல்கம் ஃபாஸ்ட்ஃபுட் உணவகத்தை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கடையில் பரமத்தியைச் சேர்ந்த டேவிட் என்பவர் தனது குடும்பத்திற்கு சிக்கன் பிரியாணியை பார்சல் வாங்கிச் சென்றார்.
வாங்கிச் சென்ற பிரியாணியை பிரித்து சாப்பிட முற்படும் போது, அதில் வெட்டுக்கிளி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக சம்பந்தப்பட்ட உணவுகத்தின் உரிமையாளரை நேரில் சென்று கேட்டபொழுது, உரிய பதில் அளிக்காததால், உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் உரிமையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்வம அறிந்து வந்த காவல் துறையினர் பிரியாணி பார்சலை உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கி அதை சோதனை செய்ய அனுப்பி வைத்ததுடன், வாடிக்கையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Discussion about this post